Details
உங்கள் அன்பையும், நினைவுகளையும் அழகாக சொல்லும் சிறப்பு தொகுப்பு — எழுத்துப்பிழை 5 புத்தகங்கள்!
நம் வாழ்க்கையில் சில மனிதர்கள் மட்டுமல்ல, சில நினைவுகளும் முக்கியமானவை. அந்த நினைவுகளைத் திரும்பத் திரும்ப நினைக்க வைக்கும் ஒரு அழகான பரிசை அவர்களுக்கு கொடுக்க நினைத்திருக்கிறீர்களா?
அப்படி ஒரு அழகான பரிசே எழுத்துப்பிழையின் 5 புத்தகங்கள் கொண்ட இந்த சிறப்பு தொகுப்பு.
இந்த தொகுப்பில் என்ன இருக்கின்றது?
கண் சிமிட்டல் – 1:
தனிமை, கடந்த நினைவுகள், பழைய பாடல்கள், மழைதுளிகள்… சில வரிகள் உங்கள் உள்ளம் எங்கோ தேடிய நினைவுகளோடு இசையும்.
கண்ணம்மா – 1:
ஒரு ஆணின் பார்வையில் பெண்களின் அழகு, ஆழமான காதல், வார்த்தைகளின் மென்மை… இரண்டடிக் கவிதைகளில் மூடப்பட்ட காதல் பயணம்.
மிட்டாய் பயல் – 1:
பள்ளி நாட்கள், பஞ்சுமிட்டாய் வாசனைகள், சிரிப்பு, குழந்தைபோல் உளறல்கள். வாசிக்கும்போது உங்கள் கண்களில் குழந்தைபோல் சந்தோஷம்.
எழுத்துப்பிழை சிறுகதைகள் – 1:
வாழ்க்கையின் தவறுகள், யதார்த்தங்கள், நம்மில் ஒவ்வொருவருக்கும் நிகழக்கூடிய சாதாரண சந்தர்ப்பங்களை நயமாக சொல்லும் சிறுகதைகள்.
ஒரு டீ சாப்டலாமா? – 1:
ஒரு பக்கத்தில் நண்பர்கள், மறுபுறம் வாழ்க்கையின் சின்ன சின்ன விவாதங்கள், மனிதர்களோடு நடக்கும் அழகான உரையாடல்கள் — டீ கடை வாசலில் நின்று பேசும் அனுபவம் போல.



















There are no reviews yet.